Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

International tiger day poem in tamil

சர்வதேச புலிகள் தினம்  (national tigers day)-July 29

tiger with cub living in snow trees
image from pixabay

வணக்கம் நண்பர்களே சர்வதேச புலிகள் தினத்தில் அவற்றை பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

புலி இந்திய நாட்டின் தேசிய விலங்கு (1973). புலிகளை பாதுகாக்க புலிகள் பாதுகாப்பு சட்டம் 1973 ல் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் புலிகளின் பாதுகாப்புக்கு வழிவகை செய்கிறது.

காடுகளில் உள்ள தாவர உண்ணிகள் தாவரங்களை முற்றிலும் அழிக்காமல் புலி பாதுகாக்கிறது. இது நமது உணவை தாவர உண்ணிகளிடம் இருந்து பாதுகாக்கும். உலகின் பல நாடுகளில் புலிகளை பாதுகாக்க வனப்பகுதிகள் பராமரிக்கப்படுகின்றன அவற்றிற்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சுதந்திரமாக காட்டில்....
சுற்றித் திரிந்தாய்....
அங்கே உனக்கான உணவை....
நீயே வேட்டையாடி உண்டாய்....
இன்றோ....
பேராசை மனிதர்களின் கைகளில்....
சிக்கிக் கொண்டு....
கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறாய்....
வரிப் பணத்தை....
சுரண்டித் திண்பவன்....
உன் வரியிட்ட உடலை....
பதம் பார்க்கிறான்....
உன் நிலை நோக்கி....
என் ஆழ்ந்த....
அனுதாபங்கள்....


தமிழகத்தில் புலிகளை பாதுகாக்க அதனை தத்தெடுத்து வளர்க்கும் திரையுலக பிரபல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி.

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Anti-Child labor drawing

Koala karadi drawing for kids